இந்நிலையில், நெடும்பிரை கிராமத்தில் கோயில் திருவிழாவிற்காக முரளி கிருஷ்ணன் குடும்பத்தினர் வந்திருந்தனர். தொடர்ந்து, சிறுவர்கள் பரத், சந்தோஷ் மற்றும் சாய்சரண் ஆகிய 3 பேரும் நேற்று மாலை 3. 30 மணியளவில் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது, சிறுவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்க தொடங்கினர்.
அந்த கிராமத்தில் காட்டு அம்மன் தீமிதி விழா மாலை 6 மணி அளவில் நடைபெற இருந்த நிலையில், குளத்தின் அருகே உள்ள பச்சையம்மன் கோயிலில் கரகம் வர்ணிப்பதற்காக ஊர்மக்கள் திரண்டு இருந்தனர். அப்போது, குளத்தில் 3 சிறுவர்களும் தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம இளைஞர்கள் விரைந்து சென்று, குளத்தில் இறங்கி மீட்க முயன்றனர். ஆனாலும், நீரில் மூழ்கியதில் பரத், சந்தோஷ், சாய்சரண் ஆகிய மூவரும் சடலமாகவே மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.