திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயிலில் மார்கழி மாத திருவோணம் விழா விமரிசையாக நேற்று நடந்தது. இந்த விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து புதிய வஸ்திரம் சாற்றி வேத பாராயணம் மற்றும் பிரபந்தம் பாராயணம், வண்ண மலர் மாலைகள் சாற்றி அலங்காரம் செய்யப்பட்டது. சாத்துமுறை, அன்னதானம் செய்யப்பட்டது. சாத்துமுறை, அன்னதானம் போன்ற வைபவங்கள் சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.