காவல் கண்காணிப்பாளரை சந்தித்த தவெக நிர்வாகிகள்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. எம். சுதாகரை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் நேரில் சந்தித்து பழக்கூடை வழங்கினார். இந்த சந்திப்பின் போது மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுநலன் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நிகழ்வில் கமலா பீட நிறுவனர் சீதா சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் டாக்டர் பழனி உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் உடனிருந்தனர். மரியாதை சந்திப்பு நிகழ்வு சுமுகமான சூழலில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி