மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூ. மீனாம்பிகை தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அலோசனை வழங்கிப் பேசுகையில், அங்கன்வாடி மையங்களில் தற்போது நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்என்றார்.
மேலும், அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதி, குழந்தைகள் நேர் கழிப்பறைகள், மின் வசதி உள்ளதா என்பதை கேட்டறிந்த ஆட்சியர், பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையங்களின் விவரங்களையும் கேட்டறிந்தார். கூட்டத்தில், புள்ளியல் ஆய்வாளர், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.