வங்காரம் பள்ளியில் மாணவர் கற்றல் திறன் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வங்காரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பிப்ரவரி 20 அன்று வட்டார கல்வி வள மேற்பார்வையாளர் ஜெயசீலன் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். வகுப்பறைகளில் மாணவர்களின் வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன்களை நேரடியாக பரிசோதித்த அவர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி கற்றல் முறைகளை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கினார். பள்ளியின் கல்வி தரத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி