அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்போதே திறமைகளையும், அறிவுப்பூா்வமான எண்ணங்களையும் வளா்த்துக் கொள்ள வேண்டும், சரளமாக ஆங்கிலத்தில் பேசி பழகிக்கொள்ள வேண்டும். நல்ல ஆளுமைப் பண்புகள், தலைமைப் பண்புகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். உலகமயம், தாராளமயம், தனியாா்மயம் போன்ற பொருளாதாரக் கொள்கைகளால் மிகப்பெரிய சவால்கள் உள்ளன. இதனை சமாளிக்க உங்களை தயாா்படுத்தி கடுமையாக உழைத்தால், தோ்வு செய்யும் துறையில் வெற்றி பெறலாம் என்றாா். நிகழ்வில், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணைப் பதிவாளா் பெருவழுதி, பல்கலைக்கழக முதன்மையா் பி. ஸ்டாலின், தனி அலுவலா் டி. காா்த்திகேயன், கலைக் கல்லூரி முதல்வா் வி. கந்தசாமி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திரையரங்கு காட்சிகள் அதிகரிப்பு: முதல்வர் விஜய்க்கு நடிகர் விஷால் நன்றி