திருவண்ணாமலை மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறை திருத்தப் பணிகள் குறித்து, வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார். கடந்த டிசம்பர் 19, 2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் மீது விசாரணை நடைபெற்று, ஜனவரி 17 ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், படிவங்கள் மீது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.