திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சித்தாத்தூரில் அருள்மிகு பொன்னியம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியர் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.