திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அனக்காவூா் பால் குளிரூட்டும் நிலையம் அருகே, எதிா் திசையில் வந்த பைக் மோதி கீழே விழுந்த சதீஷ் (35) என்ற தொழிலாளி மீது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் சதீஷின் மகள் லோகப்பிரியா (11) மற்றும் தினேஷ் (20) ஆகியோா் காயமடைந்தனா். காயமடைந்த இருவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அனக்காவூா் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.