பின்னர் மணிகண்டனை கொடூரமாக கொலை செய்து தந்தை பாஸ்கரனை கொலை செய்து வீசிய அதே இடத்தில் மணிகண்டனின் உடலை வீசிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலையில் ஈடுபட்டவர்கள் நான்கு பேர் போலீசில் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த நான்கு பேரில் ஒருவர் 17 வயது சிறுவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேர் தலைமறைவாகி உள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை கொலைக்குப் பழிக்குப் பலியாக நிகழ்ந்தேறிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.