செய்யாறு: திமுக ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

செய்யாறு சட்டமன்ற தொகுதி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சுனைப்பட்டு, கீழ்புதுப்பாக்கம் கிராமங்களில் திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் தினகரன், ஞானவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ ஓ. ஜோதி, தலைமைக் கழக பேச்சாளர்கள் வி.ஏ. அன்பு, திருப்பத்தூர் ரஜினி ஆகியோர் கலந்துகொண்டு எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட பாடுபட்டு வரும் திமுக அரசின் 4 ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டு பேசினர். 

இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக திகழ்ந்து வரலாற்று சாதனை படைத்து வரும் இந்த அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்திட வேண்டும் என பேசினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே. சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, நகர செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சம்பத், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அசோக், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராம்ரவி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளர் மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி