செய்யாறு: எம்பி தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி போராட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி பெரியார் சிலை, முதல் அண்ணா சிலை வரை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி, வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் JCK. சீனிவாசன் ஆகியோர் இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து துண்டு பிரசாரம் வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

வெம்பாக்கம் மத்திய ஒன்றியத்தின் சார்பாக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்  சுப்பிரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி நல துணை தலைவர்கருணாகரன், ஒன்றிய அவை தலைவர்  ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சிவப்பிரகாசம் தயாளன் பெருமாள், ஒன்றிய துணை செயலாளர்கள் செல்வகுமார், சேகர், ஒன்றிய பொருளாளர்  குப்புராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் முனுசாமி, நெசவாளர் அணி அமைப்பாளர் அம்பிகாபதி, கிளை கழக செயலாளர்கள் ரவி, இளங்குமரன், இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள்  குமார், வெங்கடேசன், ஐயப்பன், பாலாஜி, லோகநாதன், அன்பழகன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கபடி ஞானமுருகன், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி