வெம்பாக்கம்: இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(50). இவர், தமிழ்நாடு மின்சார வாரியம் தூசி மாமண்டூர் மின் அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்ததாகத் தெரிகிறது. இவர், கடந்த 12-ஆம் தேதி வீட்டுக்கு மளிகைச் சாமான்கள் வாங்குவதற்காக தனது பைக்கில் சென்றார். ராந்தம் - வெம்பாக்கம் சாலையில், வடமணப்பாக்கம் கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, எதிர் திசையில் இருந்து வந்த பைக் மோதியது. 

இதில் ரவிச்சந்திரன் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த குடும்பத்தினர் ரவிச்சந்திரனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி