செய்யாறு: புதுப்பெண் மரணம்.. கைது கோரி உறவினர்கள் போராட்டம்

செய்யாறு அருகே திருமணமாகி 7 மாதங்களே ஆன ஜீவலட்சுமி (18) என்ற புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கழுத்தில் தூக்குத் தடயமும், உடலில் காயங்களும் இருந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கணவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய வலியுறுத்தி, ஜீவலட்சுமியின் உறவினர்கள் செய்யாறு அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி