செய்யாற்றில் அதிமுகவினா் 400-க்கும் மேற்பட்டோா் ஊா்வலம்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்தும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அதிமுகவினர் 400-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். 

அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி 9 பெண்கள் உள்பட 269 பேரை கைது செய்து, பேருந்துகளில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். பேருந்துகளில் ஏற்றும் போது ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நிகழ்ந்தது. 

இதில், வடக்கு மாவட்டச் செயலர் தூசி கே. மோகன் தலைமையில், முன்னாள் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன், நகரச் செயலர் கே. வெங்கடேசன், எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலர் ஜாகீர் உசேன், ஒன்றியச் செயலர்கள் எம். அரங்கநாதன், சி. துரை, வயலூர் ராமநாதன், எஸ். திருமூலன், எம். மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி