திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகம், வரும் மார்ச் 2 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 06.29 மணி முதல் மார்ச் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 05.52 மணி வரை மாசி மாத பௌர்ணமி கிரிவலத்திற்கு உகந்த நேரத்தை அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். மேலும், கோவில் நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புகளைப் பின்பற்றி, ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.