இவரது உடல் நேற்று அதிகாலை சொந்த ஊரான வெம்பாக்கத்திற்கு ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு செய்யாறு சப்-கலெக்டர் பல்லவிவர்மா, ஏடிஎஸ்பி சிவனுபாண்டி, 62வது ராணுவ பிரிவு தலைமை அலுவலர் ஈஸ்வரசிங் மற்றும் ஏராளமான கிராம மக்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து 11 மணியளவில் ராணுவ வீரர் வினோத்குமாரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வெம்பாக்கம் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.968 உயர்ந்தது