அதன்படி முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி, செய்யாறு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் பாண்டியன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி எலும்பு மருத்துவர்கள் சந்திரன், விமல்ராஜ், புகழேந்தி, மயக்க மருத்துவர்கள் பிரதீபா பாரதி, விஷ்ணுபிரியா, செவிலியர்கள் தயாசேகரி, இந்திரா, கமலா ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 31ம் தேதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செய்யக்கூடிய இதுபோன்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் தற்போது செய்யாறில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.