திருவண்ணாமலை: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி கழகத்தின் சார்பில் இன்று காலை 10 மணியளவில், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஆரணி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி ஆகியோர் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று ஜூன் 3-ஆம் தேதி பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தனர். 

உடன்: மாவட்ட துணை செயலாளர் கே. லோகநாதன், செய்யாறு திருவத்திபுரம் நகர மன்ற தலைவர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஏ. மோகனவேல், ஒன்றிய செயலாளர்கள்: வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் என். சங்கர், வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம். தினகரன், செய்யாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ. ஞானவேல், ஒன்றிய குழு உறுப்பினர், ஆரணி மத்திய ஒன்றிய பொறுப்பாளர் புதுக்கோட்டை ராஜ்குமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி