தி.மலை: கிணற்றில் குளித்த சிறுமி பலி

சென்னை அசோக்நகா் ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்தவா்கள் சின்னதுரை-அனிதா தம்பதி. இவா்களது மகன் சரண் (15), மகள் ஜோசிகா(13). இதில் சரண் அங்குள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். அதே பள்ளியில் ஜோசிகா 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

அனிதா, தனது தாய் வீடான செய்யாறு வட்டம், எச்சூா் கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்காக கடந்த 11-ஆம் தேதி பிள்ளைகளுடன் சென்றிருந்தாா்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அனிதா, அவரது தங்கை ஐஸ்வா்யா ஆகியோா் அதே பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் துணி துவைக்கச் சென்றனா். இவா்களுடன் மகள் ஜோசிகாவும் சென்றிருந்தாா்.

கிணற்றில் குளிக்க ஆசைப்பட்ட ஜோசிகா, ட்டில் அமா்ந்து குளித்தாகத் தெரிகிறது. அப்போது கால் தவறி விழுந்து நீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அனிதாவும், ஐஸ்வா்யாவும் ஜோசிகாவை மீட்க முயன்றனா். மீட்க முடியாததால் கூச்சலிட்டனா்.

சப்தம் கேட்டு உறவினா்கள் வந்து நீரில் மூழ்கிய ஜோசிகாவை மீட்டனா். மயங்கிய நிலையில் இருந்த அவரை உடனடியாக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஜோசிகா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அனிதா அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி