எரிவாயு தட்டுப்பாடு: சாலை மறியல் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் காலி உருளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சமாதியான் குளத் தெருவிலுள்ள தனியார் முகமையில் உருளைகள் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அரசு மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலருக்கு மட்டும் உருளைகள் வழங்கப்படுவதாகவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். தகவலறிந்து வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். உருளைகள் வந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என முகவர்கள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி