திடீர் வெள்ளப்பெருக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் செய்யாறு ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றுக்கு சென்ற வயதான கணவன் மனைவி ஆகியோர் ஆற்றில் சிக்கிக் கொண்டதனால் தகவல் அறிந்து வந்த தீயனுக்கு துறையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் செய்யாறு அடுத்த அனப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசந்திரன், அவரது மனைவி கற்பகம் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்யாறு ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கால் பரபரப்பு ஏற்படுவதால் ஆற்றில் யாரும் நெருங்க வேண்டாம் எனவும் ஆடுகள் மாடுகள் மேய்க்க யாரும் ஆற்றும் கரைக்குச் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி