திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் வாணியர் தெருவில் கட்டுமானப் பணியின் போது, பெண் கட்டிடத் தொழிலாளி ஒருவர் இரும்புக் கம்பிகளுக்கு இடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று (04.06.2026) ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் நடத்திய மீட்புப் பணியில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.