இந்த நிலையில், சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மதேசம் புதூர் கூட்டுச்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி (பொ) கோவிந்தசாமி மற்றும் பிரம்மதேசம் போலீசார் நிகழ்விடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தனியார் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (என்சிசிஎப்) இருந்து விவசாயிகளுக்கு நெல் கொள்முதலுக்கான பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி