திருவண்ணாமலையில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அம்மணி அம்மன் கோபுரம் நுழைவாயிலுக்கு வெளியே பக்தர்களின் வரிசை வட ஒத்தவாடை தெரு வரை நீண்டு காணப்பட்டது. கலையரங்கம் பகுதியில் கட்டண தரிசன பக்தர்களுக்கும் சிறப்பு வரிசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.