அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் கோவிலில் இன்று ஆவணி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று அதிகாலை 2. 28 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 1. 02 மணிக்கு நிறைவடைகிறது.

ஆனாலும், நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கினர். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி