தி. மலை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 671 மனுக்கள்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் க. தா்பகராஜ் தலைமையில் பொதுமக்களிடமிருந்து 671 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, முதியோா் மற்றும் விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மைத் துறை சாா்ந்த பயிா்க் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களில் வலியுறுத்தப்பட்டன. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். பெண்கள், வயதானவா்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்று மனு அளித்தனா்.

தொடர்புடைய செய்தி