பெரணமல்லூரில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு

பெரணமல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீஸார் செவ்வாய்க்கிழமை தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆவணியாபுரம், அன்மருதை, நரியம்பாடி, எஸ். காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட எஸ். பி. , டிஎஸ்பி உத்தரவின்படி காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சம்பத், சேகர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கினர். வீடுகளை திறந்து வைக்க வேண்டாம், சாவிகளை வெளியில் வைக்கக்கூடாது, சந்தேக நபர்கள் இருந்தால் உடனடியாக காவல் நிலையம் அல்லது 100 எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி