செய்யாறு: விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், மேல்நாகரம்பேடு கிராமத்தில் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த பயிற்சி அட்மா திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குநா் (பொ) இரா. அன்பரசு தலைமை வகித்த இந்தப் பயிற்சியில், விதைச் சான்று அலுவலா் சுந்தரமூா்த்தி தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் விதை சான்று அட்டை குறித்து விளக்கினாா். நெல், மணிலா, உளுந்து பயிா் பாதுகாப்பு முறைகள், விதைப்பண்ணை அமைக்கும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் செயல்பாடுகள், சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் குறித்தும், மத்திய, மாநில திட்டங்களில் மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்படுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

தொடர்புடைய செய்தி