திருவண்ணாமலை: சூரிய ஒளி சிவலிங்கத்தில் பட்ட அற்புதம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில், பராபவ ஆண்டு தமிழ் புத்தாண்டு தினமான நேற்று (14.04.2026) காலை ஒரு அரிய அற்புத நிகழ்வு அரங்கேறியது. அருணாசல மலை உச்சியிலிருந்து சூரிய கிரணங்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது பொன்னொளியாக விழுந்தது. சூரியன் சிவபெருமானை வழிபடுவதாகக் கருதப்படும் இந்த காட்சியைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே திரண்டு, பரவசத்துடன் அரோகரா என முழக்கமிட்டனர். இந்த அதிசய நிகழ்வு ஒவ்வொரு சித்திரை முதல் நாளன்று மட்டுமே நிகழும்.

தொடர்புடைய செய்தி