திருவண்ணாமலையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி MLA தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் செங்கம் தொகுதி MLA டி. எஸ். வேலு, முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி