செய்யாறு காவல் உட்கோட்டம், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா், தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளாமலை கிராமம் அருகே செய்யாறு ஆற்றுப் பகுதியில் நின்றிருந்த 2 சரக்கு வாகனங்களை சோதனையிட்டதில், அவற்றில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்ததது. உடனடியாக 2 சரக்கு வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, உத்திரமேரூா் வட்டம், புலியூா் கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் (27), செய்யாறு வட்டம் கூழமந்தல் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி (36) ஆகியோரை கைது செய்தனா்.