தி.மலை: பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞர் பலி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் அஜித்குமாா் (25), மரவேலை செய்யும் கூலித் தொழிலாளி. இவா், நேற்று இரவு புதுப்பட்டு சாலையில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டை பகுதி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

புதுப்பட்டு பகுதியில் உள்ள மதுக் கடை அருகே சென்ற போது, செங்கத்தில் இருந்து புதுப்பட்டு நோக்கி வந்த டிராக்டா் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த அஜித்குமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அஜித்குமாரின் உடலை செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவல் அறிந்த செங்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியபோது, டிராக்டா் புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நபருடையது என்பதை தெரிந்துகொண்டு, அங்கு சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
மேலும், டிராக்டா் உரிமையாளா் பிரகாஷ், அதை ஓட்டி வந்த கோபி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி