திருவண்ணாமலை: கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் (35) என்ற தொழிலாளி, இனாம்காரியந்தல் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால், மோட்டார் பைப்பைப் பிடித்துக்கொண்டு இரவு முழுவதும் உயிருக்குப் போராடிய அவரை, நேற்று காலை கிணற்றின் உரிமையாளர் மகன் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி