இதையொட்டி, சுவாமிக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் விழாக்குழுவினர், உபயதாரர்கள் முன்னிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு, திருமண வரவேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் சுவாமியை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது. மேலும், கோயில் அருகே கலை நிகழ்ச்சி மற்றும் அதிகாலையில் வாணவேடிக்கை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்திய-சீன எல்லை பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண உடன்பாடு