வந்தவாசி: பள்ளி மாணவா்களுக்கான கற்றல் திறன் விழிப்புணா்வு.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய வடக்கு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான கற்றல் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை வி. சுகன்யா தலைமை வகித்தார். வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படை கற்றல் திறன்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு அவர் புத்தகங்களை பரிசாக வழங்கினார். ஆசிரியை தவமணி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி