திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தானிப்பாடி மாரியம்மன் கோயிலில் மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர். தேர் திருவிழா முடிந்த நிலையில் கோயில் நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்ள சென்றபோது திருட்டு சம்பவம் தெரியவந்தது. தகவலறிந்த தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் தண்டராம்பட்டு சந்தைமேடு பகுதியில் உள்ள சிவன் கோயில் உண்டியலுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.