வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பெருமாளுக்கு திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் பெருமாள் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்தார்.
இதுகுறித்து நீதிபதி பார்த்தசாரதி பிடிவாரன்ட் பிறப்பித்து இருந்தார். இந்நிலையில் நேற்று கீழ்வில்லிவலம் கிராமத்திற்கு பெருமாள் வந்ததாக மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற பெருமாளை சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பார்த்தசாரதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.