செங்கம் ஆட்டுச் சந்தை களைகட்டியது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற வாராந்திர ஆட்டுச் சந்தையில் 5,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன. மே 25 அன்று நடைபெற்ற இந்த சந்தையில், செங்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனர். வெள்ளாடுகள் கிலோ ₹1,000 வரையிலும், செம்மறி ஆடுகள் கிலோ ₹700 வரையிலும் விற்பனையானது. தரமான கிடாய்கள் ஜோடி ₹60,000 முதல் ₹1 லட்சம் வரை விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சந்தை மைதானத்தில் இடநெருக்கடி நிலவுவதால், மாற்று இடம் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி