மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி ஆர். சுப்புலட்சுமி வரவேற்றார். கல்லூரிச் செயலர் டி. அறவாழி, முதல்வர் பா. துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை சவிதா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் ஞா. செல்வகணபதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மாணவ-மாணவிகள் பேச்சாளராக வர வேண்டும் என்றால் பயம், தயக்கம் ஆகிய இரண்டும் இருக்கக் கூடாது. ஏராளமான புத்தகங்களைப் படிக்க வேண்டும். தைரியமாக, உண்மையான தகவல்களைக் கூற வேண்டும் என்றார். கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர்கள், மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், கல்லூரித் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகராக அவதாரம்