திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சொந்த கட்டிடம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த ஆண்டே கல்லூரி தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் மற்றும் துறை அலுவலர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.