திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் டிசம்பர் 3-ம் தேதி அதிகாலை ஏற்றப்படும். அன்று மாலை 6 மணி அளவில், 2,668 அடி உயரமுள்ள தீபமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 1,500 மீட்டர் காடா துணி மற்றும் 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். இந்த மகா தீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.