பின்னா், அவரது சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டது. அப்போது, அவரது உறவினா்கள் இளங்கோவின் இறப்பில் மா்மம் இருப்பதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் சடலத்தை வாங்க மறுத்தும் தேவனாம்பட்டு கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா்.
இந்த நிலையில், நேற்று(அக்.4) நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் இளங்கோவின் உறவினா்கள் 2-ஆவது நாளாக மீண்டும் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த போளூா் டிஎஸ்பி மனோகரன் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, வரும் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக கூறினாா். இதையடுத்து, உறவினா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். மேலும், தேவனாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 6 பேரை சந்தேகத்தின்பேரில், போலீஸாா் விசாா்த்து வருகின்றனா்.