அப்போது, அந்த வழியே தண்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவரும் தனிப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளருமான கிருஷ்ணராஜ் காரில் வந்தாராம். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள், கிருஷ்ணமூர்த்தி தம்பதி மற்றும் அங்குள்ள தேநீர்கடையில் நின்றிருந்தவர்கள் மீது மோதியதாம். இதில் தேநீர் கடையில் நின்றிருந்த தருமபுரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கிருஷ்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி உள்பட 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் நால்வரும் அவசர ஊர்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.