வெம்பாக்கம்-அப்துல்லாபுரம் சாலையில் சென்றபோது எதிா்பாராதவிதமாக ஆட்டோ நிலைத் தடுமாறி கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அரிகிருஷ்ணனை அருகிலிருந்தவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். அரிகிருஷ்ணனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
விபத்து குறித்து உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.