திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் பயன்பெறும் 20 பயனாளிகளுக்கு, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வீடுகட்டும் பணி ஆணையை வழங்கினார்.
உடன், ஒன்றிய குழுத் தலைவர் விஜயராணி குமார், ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.