செங்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, செங்கம் பகுதியில் கல்லூரி அமைத்திட தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதையடுத்து செங்கம் தொகுதிக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்தாண்டு செயல்பட உள்ள தற்காலிக இடத்தினை (விவேகானந்தா பள்ளி கட்டிடத்தினை) செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில், நகர செயலாளர் மு. அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர்கள் த. செந்தில்குமார், அ. ஏழுமலை, த. மனோகரன், சிவ சேமன், நகர மன்ற தலைவர் எச். சாதிக்பாட்ஷா, மாவட்ட தொழிலாளரணி சேட்டு, மு. பேரூராட்சி தலைவர் சி. முருகன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னாள் - இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.