இவா், உடனடியாக செங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இதனால் அப்பகுதியில் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும், கடையில் இருந்த இரும்பு, நெகிழிப் பொருள்கள் தீயில் எரிந்து கருகியதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.