திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று (ஏப்ரல் 8) உற்சாகமாக நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 4 தொகுதிகளுக்கும் சேர்ந்த வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு, அமைச்சர் எ. வ. வேலு மரியாதையாக செங்கோல் வழங்கினார். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.