திருவண்ணாமலை: எம் எல் ஏ தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி